மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை மேலத்தெருவில் குமார் செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வயலில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு பசு மாடுகளை கட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அப்பகுதியில் கனமழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த மாடுகளின் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். எனவே மின்னல் தாக்கி இறந்த மாடுகளுக்கு இழப்பீடு தொகை பெற்று தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.