Categories
உலக செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து…. ஒருவர் பலி …. சீனாவில் பரபரப்பு …..

லியோனிங் மாகாணத்தில் பஸ் வெடித்ததில் ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனா நாட்டில் லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங்  நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. இதனால்  பெரும் சத்தம் கேட்டது. ஆனால் தீ பிடிக்கவில்லை என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் படு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்  பேருந்தின் ஜன்னல், கண்ணாடிகள் உடைந்து சாலை ஓரத்தில் நிற்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில்   வெளியாகியுள்ளது. பஸ் வெடித்ததற்கான  காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் இது குறித்து   போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |