Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பாய்லர்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்…!!!

பாய்லர் வெடித்து சிதறியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் பன்னீர், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(70) உட்பட 4 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று தண்ணீரை சூடாக்கும் பாய்லரை ராமன் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் உடல் சிதறி ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தொழிற்சாலையின் மேற்கூரையும் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |