Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி அருகே இருக்கும் சுக்கிரன் விடுதியில் காதர் உசேன் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவிலான தைல மரக்காடு அமைந்துள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |