சாக்கு குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அகண்டநல்லூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் சாக்கு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீ குடோன் முழுவதும் வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 30,000 சாக்குகள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து காமராஜ் அகண்டநல்லூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.