செல்போன் ஷோரூம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கீதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென புகை மூட்டத்துடன் கடையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கீதனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கீதன் கடைக்கு புறப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.