Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

தீ விபத்தினால் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் பேக்கரி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்து  உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |