தென் கொரியாவில் உள்ள குவாச்சியோன் நகரில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள சுரங்க பாதை வழியாக சென்ற பேருந்து மற்றும் ட்ரக் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன் பிறகு 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு 35 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் 50 தீயணைப்பு வீரர்கள் உட்பட் மொத்தம் 140 மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
At least 6 people reported to have died in expressway tunnel fire in Gwacheon, South Korea.
Initial findings showed the fire started after a bus and a truck collided. It quickly spread to the tunnel, causing massive clouds of smoke.pic.twitter.com/Ir1ydXawEz
— Raphael Rashid (@koryodynasty) December 29, 2022