இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ரிட்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
நில நடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும் இதனை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.