Categories
உலக செய்திகள்

“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று தீவிர மழை பெய்து தீர்த்தது. இந்த மழையால் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. பர்வான், வார்டக் ஆகிய இரு மாகாணங்களில் வெள்ளம் அத்துமீறி பாய்ந்ததால் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் மண்ணோடு புதைந்து பலியாகியுள்ளனர். இந்நிலையில் சேரும் சகதியுமாய் வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் பல்வேறு மக்கள் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் எனவும், மீட்புப்பணியில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர மீட்பு பணி நடப்பதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |