Categories
தேசிய செய்திகள்

பயணச்செலவில் சலுகை….. இனி மக்கள் அனைவருக்கும்…. இதுவரை இல்லாத அறிவிப்பு….!!

இந்திய மக்களுக்கான புதிய சேவையை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. 

ஆன்லைன் வர்த்தகத்தின் அரசனாக திகழக்கூடிய அமேசான் நிறுவனம், தொடர்ந்து மக்களுக்கு தேவையான பல அப்டேட்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது. முதற்கட்டமாக விற்பனை பொருள்களை மட்டுமே தனது தளத்தில் விற்பனை செய்து வந்த அமேசான், கரண்ட் பில், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கும்,

கூகுள் பே, போன் பே போன்றவற்றை போல, பணபரிவர்த்தனை செய்யவும், சினிமாக்களை பார்ப்பதற்கும் என மக்களுக்கு தேவையான விஷயங்களை கவர்ந்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அந்த வகையில்,

இந்தியாவில் ஐஆர்டிசி நிறுவனம், அமேசான் உடன் சேர்ந்து புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் அமேசான் வலைதளம் மற்றும் செயலின் மூலம், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இத்துடன் தளர்த்தப்பட்ட  சேவை கட்டணம், அனைவருக்கும் கேஷ்பேக், பிரைம் உறுப்பினர்களுக்கு 12 சதவிகிதம் கேஷ்பேக் ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |