தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில்களில் பயணிகள் வசதிக்காக வை-பை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளஅறிக்கையில், இதன் மூலமாக அரை மணி நேரத்திற்கு பயணிகள் இலவசமாக வைஃபை வசதியை பயன்படுத்தலாம்.
அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, மதுரை – 95, பாலக்காடு – 59, திருவனந்தபுரம் – 70 என மொத்தம் 543 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் இதுவரை 5,087 கீ.மீ தூரத்துக்கு கண்ணாயிழை கேபிள் தொடர்பு அமைப்பு என்றும் தெரிவித்துள்ளது.