முன்மாதிரி ஆட்டோ ஓட்டுனரை போலீஸ் கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவில் ஆட்டோ டிரைவரான அண்ணா துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக அண்ணாதுரை சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவர் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு தினசரி வாரப் பத்திரிகைகள் படிக்க ஏற்பாடு, குளிர்சாதன வசதி, வை-பை வசதியுடன் லேப்டாப் ஆகியவற்றை செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கின்றார். எனவே போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அண்ணாதுரையை முன்மாதிரி ஆட்டோ ஓட்டுநராக தேர்வு செய்து பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.