நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து ரயில் சேவையும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையே முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண ரயில் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.