விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஓமன் நாட்டின் தலைநகருக்கு 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று கிளம்ப தயார் ஆனது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை சரி செய்தனர். இதனையடுத்து விமானம் புறப்பட்டு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.