Categories
தேசிய செய்திகள்

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து… திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே ஆர் சர்க்கிள் சாலையில் சென்ற மாநகரப் பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே துரித நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |