சேற்றில் சிக்கிய பேருந்தை நீண்டநேரம் போராடி மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலை ஊராட்சியில் தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தலைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று தடசலட்டி சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சேற்றில் வசமாக சிக்கியது. இதனையடுத்து நீண்ட நேரம் போராடி சேற்றில் இருந்த பேருந்தை மீட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.