Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…. டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்…. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், உங்களுக்கு முக்கியமான செய்தி இருக்கிறது. அந்த வகையில் சில சமயங்களில் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து ரயில்டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது இதில் இருந்து விடுபடுவதற்கு, டிக்கெட் முன் பதிவு விதிகளை ரயில்வேயானது மாற்றி உள்ளது. அதன்படி ரயில்வே அமைச்சகம் ஆப்பிலிருந்து முன் பதிவு செய்யாத டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்வதற்கான தூரத்தை அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பின், உங்களது பயணத்தைத் துவங்க வேண்டிய நிலையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளில் கிடைக்கும் இத்தள்ளுபடி பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். பயணச் சீட்டு எடுக்க நீண்டவரிசையில் நிற்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். உண்மையில் பயணம் துவங்கும் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இதுவரையிலும் நீங்கள் ஆப் வாயிலாக முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இப்போது 2 கி.மீ தூரம் 20 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரம் உள்ளபோது, ​​பல்வேறு நேரங்களில் மொபைல் நெட்வொர்க் காணாமல்போவது ரயில்வே வாரியத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் விருப்பப்பட்டாலும் டிக்கெட்டை முன் பதிவு செய்ய இயலவில்லை. இதனால் இந்த தூரம் இப்போது 2 கிலோ மீட்டரிலிருந்து 20 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. புது முறையின் படி புறநகர் அல்லாத வகுப்புகளுக்கு, 5 கி.மீ பதிலாக, 20 கி.மீ தொலைவிலிருந்து முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது தவிர்த்து புறநகர்பகுதி டிக்கெட் முன்பதிவுக்குரிய இந்த தூரம் 2 கி.மீட்டரிலிருந்து 5 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டபின் ரயில் நிலையத்தை அடைந்ததும், டிக்கெட்டுகளுக்காக நீண்டவரிசையில் நிற்பதிலிருந்து பயணிகள் விடுபடுவார்கள்.

Categories

Tech |