தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை – உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை இயக்கப்படும் எனவும், இந்த சிறப்பு ரயில் கோவையிலிருந்து அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 4:40 மணிக்கு புறப்பட்டு மூன்றாவது நாள் காலை கோரக்பூர் சென்றடையும்.
இதே போல் கோரக்பூர் முதல் கோவை இடையிலான சிறப்பு ரயில் வருகிற எட்டாம் தேதி முதல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. மூன்றாவது நாள் காலை 7.25 மணிக்கு கோவை வந்தடைகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில் நெல்லூர், விஜயவாடா, நாகூர், போபால், கான்பூர், திருப்பூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.