வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட 23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.