Categories
தேசிய செய்திகள்

பயணிகளே!… ரயிலில் தெரியாம இதை எடுத்துட்டு போயிடாதீங்க…. மீறினால் ஜெயில்…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இப்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போக ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்ககளுக்கு ரயில்வே தடைவிதித்திருக்கிறது. அப்பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாது. எனினும் மீறுவோருக்கு சிறைதண்டனையும், அபராதமும் காத்திருக்கிறது.

அதாவது, ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது. ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ்சிலிண்டர், கன் பவுடர் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு ரயிலில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. இதுகுறித்து முன்னெச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை இந்திய ரயில்வே வழங்கி இருக்கிறது.

அனைத்து ரயில் நிலையங்களும் இதுகுறித்த போஸ்டர்களை ஒட்டி இருக்கிறது. ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் சென்று பிடிபட்டால், அது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அத்தகைய வழக்கில் ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 வருடங்கள் வரை சிறைத்தண்டனை (அல்லது) இரண்டும் விதிக்கப்படலாம்.

Categories

Tech |