Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பயணிகளே….! “ரயில்கள் நேரத்தில் திடீர் மாற்றம்”…… சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ஜங்ஷன் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று சேலம் வழியாக செல்லும் ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 13352) ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 3 மணி நேரம் காலதாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

எர்ணாகுளம் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12678) எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 2 மணி நேரம் 30 நிமிடங்கள் காலதாமதமாக காலை 11.40 மணிக்கு புறப்படும். அரக்கோணம் – சேலம் இடையே இயக்கப்படும் ரயில் (எண் 16087) அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ஜோலார்பேட்டை – சேலம் இடையில் ரயில் இயக்கப்பட மாட்டாது. இதேபோல் சேலம் – அரக்கோணம் ரயில் (எண் 16088) ஜோலார்பேட்டை – அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலும் சேலம் – ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் வரும் 11ம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் திருப்பதி – காட்பாடி (எண் 07581) எக்ஸ்பிரஸ் காலை 10.55 மணிக்கும், மறுமார்க்கமாக காட்பாடி – திருப்பதி (எண் 07582) இடையில் இரவு 9.55 மணிக்கும் புறப்படும்.
இதேபோல் விழுப்புரம் – மயிலாடுதுறை (எண் 06691) எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.25 மணிக்கும், மறுமார்க்கமாக மயிலாடுதுறை – விழுப்புரம் (எண் 06690) இடையில் காலை 6 மணிக்கும் புறப்படும். மேலும் விழுப்புரம் – புதுச்சேரி (எண் 06737, 06799) எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 5.30 மணி மற்றும் மாலை 5.50 மணிக்கும், மறுமார்க்கமாக புதுச்சேரி – விழுப்புரம் (எண் 06738, 06436) இடையில் காலை 8.10 மணி மற்றும் இரவு 7.45 மணிக்கும் புறப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |