Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயணிகளை கவரும் வகையில்… அமைக்கப்பட்ட சிற்ப சுவர்… புதிதாக கட்டப்படும் ரயில் நிலையம்…!!

புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி ரயில் நிலையத்தில் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறந்த வேலைபாடுகளுடன் கூடிய சிற்பச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் போடி-மதுரை இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்ததை அகற்றிவிட்டு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. தற்போது மதுரையில் இருந்து தேனி வரை செல்லும் ரயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டமும் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து தேனியில் இருந்த ரயில் நிலையத்தை அகற்றிவிட்டு புதிய ரயில்வே நிலையம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தில் தேனி மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் மாவட்டத்தின் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பயணசீட்டு அலுவலக வளாகத்தில் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பச்சுவர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |