Categories
மாநில செய்திகள்

பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

* ரயில் எண் 16127 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது டிசம்பர் 26, 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.

* ரயில் எண் 20973 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் அஜ்மீர் – ராமேஸ்வரம் இடையில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1, 8 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.

* ரயில் எண் 22632 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பிகானேர் – மதுரை இடையில் இயக்கப்படுகிறது. இது டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படும்.

* ரயில் எண் 12636 கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை – சென்னை எழும்பூர் இடையில் இயக்கப்பட்டு வருகிறது. இது வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 6 ஆகிய தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

* மேலும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரக்கோணம் – காட்பாடி இடையிலான பாலம் எண். 299ல் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,

* டிசம்பர் 25ஆம் தேதி காலை 10.50 மணிக்கு புறப்படும் ரயில் எண் 12245 கொண்ட ஹவுரா – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் குண்டூர், ரேணிகுண்டா, பாகலா ஜங்ஷன், காட்பாடி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* டிசம்பர் 25 மற்றும் 26ல் காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் எண் 12295 கொண்ட கே.எஸ்.ஆர் பெங்களூரு – தானாபூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் தர்மாவரம் ஜங்ஷன், கூடி, தோனே, நந்த்யால், குண்டூர் ஜங்ஷன், விஜயவாடா வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* டிசம்பர் 26ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் ரயில் எண் 12246 கொண்ட யஷ்வந்த்பூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் தர்மாவரம் ஜங்ஷன், கூடி, தோனே, நந்த்யால், குண்டூர் ஜங்ஷன், விஜயவாடா வழியாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Categories

Tech |