தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில் பெங்களூரு அருகில் உள்ள யஸ்வந்த்பூர் – மைசூர், யஷ்வந்த்பூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் இது குறித்து வெளியான அறிவிப்பில், எஸ்வந்த்பூர் நெல்லை சிறப்பு ரயில் வருகிற 4 மற்றும் 11ஆம் தேதிகளில் எஸ்வந்த்பூரில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும். அதன் பிறகு அக்டோபர் ஐந்து மற்றும் 12ம் தேதிகளில் நெல்லையிலிருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள் இரவு 11:30 மணிக்கு அக்டோபர் ஆறு மற்றும் 13ம் தேதி யஸ்வந்த்பூரை வந்தடையும். மேலும் இந்த சிறப்பு ரயில் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், சேலம், விருதுநகர், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.