Categories
மாநில செய்திகள்

பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க கோரி போராட்டம் …!!

மேற்கு வங்கத்தில் பயணிகளின் ரயில் சேவை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து பொதுமக்கள் ரயில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக அன்றாடம்  வேலைக்கு செல்பவர்களும், கூலி தொழிலாளர்களும், போக்குவரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வரும் நிலையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி புன்சோ ரயில்நிலையத்தில் தண்டவாளங்களில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |