ருமேனியாவில் ஓட்டுநர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருமேனியாவில் உள்ள டோட்டன்ஹாமில் இருக்கும் பாடசாலைக்கு வெளியில் நேற்று இரவில் வாகனத்திலிருந்து ரத்த வெள்ளத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ருமேனியாவைச் சேர்ந்த கேப்ரியல் பிரிங்கி (37). இவர் கடந்த 13 வருடங்களாக பிரிட்டனில் வசித்து வருகிறார். மினி காப் ஓட்டுநராக இருக்கும் பிரிங்கிக்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த போது பயணி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். எனவே அவர் தான் பிரிங்கியை கொலை செய்திருப்பார் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 2015-ஆம் வருடத்திலிருந்து மினி காப் ஓட்டுநராக வேலை செய்து வரும் பிரிங்கியை ஆள் நடமாடாத பகுதியில் கொலை செய்துள்ளனர். மேலும் கொள்ளையடிப்பதற்காக இச்சம்பவம் நடத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.