அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்க அரசு பயணக் கட்டுப்பாடுகளை தளர்வு செய்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 4.73 கோடி பேர் கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3.73 கோடி ஆகும். 92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 7.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை குறைக்க அமெரிக்க அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயண கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஆசிய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமான நிறுவனங்களும் பேரிழப்பை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அமெரிக்க அரசு 20 மாதங்களுக்கு பிறகு பயண கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
இருப்பினும் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் போன்ற சில கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நடைமுறையில் கொண்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.மேலும் அமெரிக்க விமான சேவை நிறுவனம் மற்றும் அமெரிக்காவிற்கும் வரும் பன்னாட்டு விமான சேவை நிறுவனங்கள் பயணிகளின் முழு விபரங்கள் மற்றும் அவர்களின் முகவரியை தெளிவாக வைத்திருக்க வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.