Categories
தேசிய செய்திகள்

பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனை….? IRCTC முடிவு….!!!!

இந்தியன் ரயில்வே உலகில் நான்காவது பெரிய ரயில் நிறுவனமாகும். நாடு முழுவதும் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் அளவுக்கு ரயில் பாதை இந்தியாவில் உள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் முதல் லட்சகணக்கான பயணிகள் பயணம் செய்தனர். ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடைய பயண சீட்டுகளை இதன் மூலமாக பதிவு செய்கின்றனர். இவ்வாறு பயணம் மற்றும் சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கொண்ட இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் உள்ளது. இந்த இணையதள பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான கணக்கை தொடங்குவதற்கு பயணிகளின் பெயர் பிறந்த தேதி, ஈமெயில், கைபேசி எண் முகவரி உள்ளிட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். அதன்படி கோடிக்கணக்கான பயணிகள் உடைய தரவுகள் IRCTC இடம் இருக்கும்.

இந்நிலையில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC முடிவு செய்துள்ளது. ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் IRCTC-யிடம், லட்சக்கணக்கான மக்களின் பெயர், தொலைபேசி எண், கடவுச்சொல், வங்கி விவரங்கள், பயணிக்கும் இடங்கள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. இவற்றை தனியாருக்கு விற்று 31,000 கோடி வரை வருமானம் ஈட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை இப்படி விற்பது சரியா.. அரசுக்கு இதற்கு அதிகாரம் உள்ளதா?

Categories

Tech |