உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் இன் புதிய அப்டேட்டை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் வெளியிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் சேட் செய்யும்போது மெசேஜை அழுத்தி பிடித்தால் குறிப்பிட்ட இமோஜிக்கள் கிடைக்கும்(அப்டேட்டின் படி லைக், லவ், ஆச்சரியம், சோகம்) இந்த அப்டேட் பெற உங்களது வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அப்டேட் செய்தும் கிடைக்காதவர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.