வாட்ஸ்அப் இன் புதிய பிரைவசி பாலிசி கொள்கை அப்டேட் செய்யாமல் இருந்தால் மே 15க்கு பின் வாட்ஸ்அப் டெலிட் செய்யப்படும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனமானது கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் இச்செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகள் சேகரித்து பேஸ்புக் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பகிர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல வாடிக்கையாளர்கள் டெலிக்ராம் மற்றும் சிக்னல் போன்ற மாற்று செயலியைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் புதிய பாலிசி கொள்கைகளை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர் மே 15 – க்குள் வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் செப்டம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியில் அவர்களின் கணக்கு நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.