Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பயனர்களே…!! Whatsapp இல் சிலிண்டர் எப்படி புக் செய்வது…. வாங்க பார்க்கலாம்….!!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது.

நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்து விடுவார்கள். பாரத் கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்அப் மூலமாக புக்கிங் செய்யலாம். அதற்கு முதலில் 1800224344 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் செய்ய வேண்டும். வாட்ஸ் அப்பில் hi அனுப்பிய உடனே பாரத் கேஸ் தொடர்பான சேவைகள் தோன்றும். அதில் book cylinder என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து 1 என டைப் செய்து சிலிண்டர் புக்கிங் செய்யலாம். மீண்டும் மெயின் மெனு வந்து hi அனுப்பினால் பணம் செலுத்தும் வசதி இருக்கும். அதற்கு 2 என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

Categories

Tech |