திமுக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திமுக சொன்னதை நிறைவேற்றியுள்ளது என வீடியோ வெளியீட்டு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை விளக்கி இருந்தார்.
இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் அரசு நிறைவேற்றிய வாக்குறுதி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி இருந்தார். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விக்கடன் ரத்து , நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.