Categories
தேசிய செய்திகள்

பயனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சிலிண்டர் புக்கிங்க் ரொம்ப ஈஸி…. புது வசதி அறிமுகம்…!!!!

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட் போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். இதற்காக  அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது.

ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக  ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘upi123pay’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலமாக இண்டர்நெட் இல்லாமலேயே சாதாரண போன் மூலம் புதிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.

இதன் அடிப்படையில் பாரத் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் UPI12Ppay மூலம் எளிதாக குரல்வழி பரிவர்த்தனை மேற்கொள்ள பாரத் பெட்ரோலியம் வழிவகை செய்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பாரத் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

080-4516-3554 என்ற எண்ணுக்கு பாரத்கேஸ் பயனாளிகள் சாதாரண போனில் இருந்து அழைப்பு விடுக்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை மூலம் உடனடியாக சிலிண்டர் புக் செய்து கட்டணத்தையும் அப்போதே செலுத்திகொள்ளலாம்.

Categories

Tech |