இந்தியன் ரயில்வே ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இதுவரை இந்த வகுப்பில் படுக்க விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ரயில்கலில் மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுக்கை விரிப்புகள் வைப்பதற்கு பெட்டிகளிள் போதிய இடம் இல்லாததால் இந்த வகுப்புகளில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. எனவே இனி மூன்றாம் ஏசி எக்கானமி வகுப்புகளில் 81, 82, 83 ஆகிய படுக்கைகள் படுக்கை விரிப்புகளை வைக்க பயன்படுத்தப்படுவதால் பயணிகள் இந்த படுக்கைகளை புக்கிங் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த சீட்டுகளில் புக்கிங் செய்தவர்களுக்கு எமர்ஜென்சி ஒதுக்கீடு படுக்கை வழங்கப்படும் என்று கூறியுள்ளது