பயன்பாடற்ற எந்த ஒரு பொருளும் இறைவனுக்கு பயன்படுமேயானால் எந்த ஒரு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு .
மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை திறந்து வைத்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழக முதல்வர், எந்த ஒரு திருக்கோயிலுக்கும் தங்கம் தேவைப்பட்டால் அந்த திருக்கோயிலுக்குரிய வைப்பு நிதியை ரத்து செய்து தங்கத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து, அங்கு ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளை நியமித்துள்ளது அரசாணையாக வெளியிடப்பட்டது.
இவர்கள் கூடிய விரைவில் முதல்வரை சந்தித்து அவரின் ஆலோசனைப்படி நகைகளை பிரிக்கும் பணியை மேற்கொள்வர். எங்களைப் பொறுத்தமட்டில் பயன்பாடற்ற எந்த ஒரு பொருளும் இறைவனுக்கு பயன்படுமேயானால் எந்த ஒரு விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்” என்று உரைத்தார்.