தளவாட பொருட்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக கடந்த 2009-ஆம் ஆண்டு செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரம் கடந்த 2017-ஆம் ஆண்டு பயன்பாடு இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் நிறுவனத்தின் பொறியாளர் கோசல குமார் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்தார்.
அப்போது 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மர்ம நபர்கள் திருடிய பொருட்களை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.