Categories
தேசிய செய்திகள்

பயப்படாதீங்க பாதுகாப்பானதுதான்…. நான் எல்லாம் செய்வேன்…. மக்களிடம் உரையாடிய மோடி….!!

வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று  காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் உயர்த்தப்படும்.

நான் கடந்த 2014 ஆம் வருடத்திலிருந்து வாரணாசி தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருக்கிறேன். மேலும் மக்களுக்குரிய தேவைகள் முழுவதையும் பூர்த்தியடைய செய்வேன். தற்போது வரை 15 மையங்கள் மூலமாக சுமார் 20,000 முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாருக்கும் தயக்கம் வேண்டாம். தடுப்பூசி முற்றிலுமாக பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் தற்போது வரை சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 534 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |