திமுகவில் ராஜீவ் காந்தி இணைவார் என செய்தி வெளியாகிய நிலையில் அதற்கு அதிரடியாக பதில் தெரிவித்து ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி, கமல் என நடிகர்கள் அனைவரும் அரசியலில் குதித்துள்ளனர். இவர்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து, பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி திமுகவில் இணைவார் என்று செய்தி வெளியானது.
இதுகுறித்து ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர், “எந்த கட்சிக்கும் செல்கிற எண்ணம் எனக்கு இல்லை. புது இயக்கம் துவங்குகிற திட்டமும் இல்லை. தமிழ்தேசிய எண்ணம் கொண்ட, சமூக நீதி பேசும் வழக்கறிஞராக, தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் களத்தில், மக்கள் நல அரசு அமைக்கும் பெரும் கனவோடு எனது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.