சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் காரைக்குடி, எஸ்.புதூர் பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.புதூர், மின்னமலைப்பட்டி, வாராப்பூர், கட்டுகுடிபட்டி ஆகிய கிராமங்களில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு கொடி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார்.
இதில் சட்டம், ஒழுங்கு நீதி குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையிலும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, மத்திய துணை ராணுவப் படையினர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் காரைக்குடியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.