விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சாலும் வெகுளித்தனமாக இருப்பதாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்துள்ளது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபட்டாலும் பிக் பாஸில் நல்ல பொழுதுபோக்காவே இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சியின் போது முதல் போட்டியாளராக ஜிபி முத்துவை நடிகர் கமல் உள்ளே அனுப்பினார். அப்போது உள்ளே சென்ற ஜிபி முத்து மறுநிமிடத்தில் உள்ளே யாரும் இல்ல சார்…. பயமாக இருக்கு…. யாரையாவது அனுப்பி வையுங்கள் என்று கூறினார். கதி கலங்கி கெஞ்சிய சம்பவம் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் போலயே என்று நினைக்க வைத்துள்ளது. அதே சமயம் ஜி.பி முத்துவுக்காக இணையதள வாசிகள் ஆர்மி உருவாக்கி தங்களுடைய அட்ராசிட்டியையும் தொடங்கி உள்ளனர்.