Categories
உலக செய்திகள்

“பயம் வேண்டாம்” ட்ரம்பிடம் இருந்து தொற்று பரவாது….. மருத்துவர்கள் கூறிய காரணம்….!!.

அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து யாருக்கும் கொரோனா தொற்று பரவாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை எடுத்து வருகின்றார். அதோடு நோய் தொற்றுக்கான அறிகுறிகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் அவர்களின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் அதிபருக்கு காய்ச்சல் வரவில்லை.

அவருக்கு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளின் தீநுண்மிகள் வளருவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் இனியும் அதிபர் ட்ரம்ப் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள தேவை இல்லை. யாருக்கும் ட்ரம்பிடம் இருந்து கொரோனா தொற்று பரவாது” என தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று மருத்துவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |