Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு…. சூறையாடிய யானை…. பொதுமக்கள் அளித்த புகார்….!!!!

தோட்டத்திற்குள் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதோடு மட்டும் இல்லாமல்  13 தோட்ட காவலாளிகளையும் கொன்றுள்ளது. இந்நிலையில் ஆசை என்பவர்  தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை பயிரிட்டுள்ளார்.

இதனையடுத்து  நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஆசையின் தோட்டத்திற்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்கு செடிகள் மற்றும் மோட்டார்களை அடித்து நொறுக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசை உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |