கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கனபள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் யானைகள் மேலுமலை சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று காலை எண்ணெகொள் புதூர் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் இணைந்து யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் பொதுமக்களை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.