பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த 2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், வருகிற அக்., மாதம் தொடங்கி 2023 மார்ச் வரை ராபி பருவத்திற்கான பயிர்கள் காப்பீடு செய்யப்படும். பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ-டோக்கியோ நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎஃப்சி எர்கோ, ரிலையன்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூலை முடிய சாகுபடி செய்யப்படும் குருவை பருவத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிவாரணம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.