பயிர் காப்பீடு தொடர்பாக கடலூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெள்ள தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார். குடிசையில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக அருகே உள்ள முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும் முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கவும் கேட்டுக் கொண்டார்.
பயிர் காப்பீடு தொடர்பாக நாகை மற்றும் கடலூர் விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை எனவும் நவம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் இ சேவை மையத்தில் ஒரு பதிவு செய்தால் மட்டும் போதுமானது என்றும் தெரிவித்தார்.