Categories
மாநில செய்திகள்

பயிர் சேதம்… “உடனே போங்க”…. அமைச்சர்கள் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்!!

பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..

தமிழகத்தில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறது.. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.. மேலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல்  டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மழை நீரால் சேதமடைந்துள்ளது.. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்..

இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்த விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..

இந்தக் குழுவில் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் இடம்பெற்றுள்ளனர்.. குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து நிவாரண நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |