டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு விலை இல்லை.
ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசம் ஓயவில்லை. அரசு கொள்முதல் நிலையங்களில் அனைத்து நெல் மூட்டைகள் நனைந்து முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. காவிரி காப்பாளர் பட்டம் மட்டும் போதுமா? பயிர் தான் விவசாயிகளின் உயிர் என்பது முதல்வருக்கு தெரியாதா? உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.