Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பயிற்சிக்கு செல்கிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜிவானா என்ற மகள் உள்ளார். இவர் முசிறியில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ரிஜிவானா தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் இளம்பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல்போன மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |