ராஜஸ்தானில் பயிற்சியின்போது போர் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் போர் விமானத்தில் எப்பொழுதும்போல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து இப்படிக்கு ஆரம்பித்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக விமானம் தரையை நோக்கி பாய்ந்த போது அந்த விமானத்தில் இருந்த விமானி வெளியில் குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து விமானப்படை இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.